ஒரு நிமிஷம் தான்…! கொரோனா டெஸ்ட் ரிசல்ட் தெரிஞ்சுக்கலாம்…!
கோலாலம்பூர்: ஒரே நிமிடத்தில் கொரோனா இருக்கிறதா, இல்லையா என்று அறிந்து கொள்ளும் டெஸ்டுக்கு சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது.
சிங்கப்பூர் நாட்டில் புகழ்பெற்றது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் 3 பேர் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவியை கொண்டு ஒருவருக்கு கொரோனா இருக்கிறதா, இல்லையா என்பதை ஒரு நிமிடத்தில் தெரிந்து கொள்ள முடியும்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் 3 மாணவர்கள், இந்திய பேராசிரியர் ஆகியோர் அடங்கிய குழு இந்த கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளது. சுவாசத்தில் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதை இந்த கருவி கண்டுபிடித்து சொல்லிவிடும்.
அதன் பின்னர் ஆர்டி பிசிஆர் டெஸ்ட் மூலம் கொரோனா இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள முடியுமாம். இந்த புதிய கருவியை பயன்படுத்தி கொள்ளலாம் என்று சிங்கப்பூர் அரசு அனுமதியை தந்திருக்கிறது.