ஆவின் பால் வினியோகம்… இனி கிடையாது…! ஷாக்கில் மக்கள்
சென்னை; ஆவின் பச்சை பால் பாக்கெட் வினியோகம் வரும் 25ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது.
மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற பால் நிறுவனங்களில் ஒன்று ஆவின். அதன் பொருட்களை மருத்துவர்கள் கூட குழந்தைகளுக்கு பரிந்துரை செய்கின்றனர்.
ஆவினில் பால் மட்டுமல்லாது, தயிர், மோர், இனிப்பு வகைகளையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். தீபாவளி தருணத்தில் விற்பனை செய்யப்பட்ட இனிப்புகளும் அமோக ஆதரவை பெற்றிருந்தது.
இந் நிலையில் மக்களுக்க ஷாக் தரும் வகையில் வரும் 25ம் தேதி முதல் பச்சை பாக்கெட் பால் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இதற்கான முடிவை ஆவின் நிர்வாகம் எடுத்துள்ளதாக தெரிகிறது. வருவாய் இழப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மட்டுமே பச்சை பால் பாக்கெட் வினியோகிக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் பல வாரங்கள் முன்பே இந்த பாக்கெட் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.
இதற்கு பதிலாக ஆவின் டிலைட் என்ற பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஊதா வண்ணத்தில் உள்ள பாலில் கொழுப்பு சத்து 3.5 சதவீதம் மட்டுமே உள்ளது. மொத்த பால் விற்பனையில் 40 சதவீதம் கொண்ட பச்சை பால் பாக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டு உள்ளதால் பயனாளர்கள் மட்டும் அல்லாது முகவர்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.