திமுகவுடன் கூட்டணி…? அண்ணாமலை பளிச், பளிச் பதில்
திருச்சி: பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுகவுக்கு எந்த காலத்திலும் தகுதியே கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நடக்கும் கட்சி கூட்டத்தில் பங்கேற்க விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:
பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது. திமுக குடும்ப ஆட்சி நடத்தக்கூடாது. ஊழலற்ற ஆட்சி நடத்த வேண்டும். நல்லாட்சி புரிய வேண்டும். இந்த 3 தகுதிகளுமே திமுகவுக்கு இல்லை.
டெல்லி போன முதல்வர் ஸ்டாலின், பாஜகவுடன் சமரசம் செய்யவோ, கும்பிடவோ இல்லை என்று கூறி இருக்கிறார். டெல்லி போகும் எந்த சிஎம்மும் இப்படி பேசியது கிடையாது.
தமிழகத்தில் நிதிநிலைமை அதலபாதாளத்தில் இருக்கிறது. 6 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. திமுக கொடுத்த 508 வாக்குறுதிகளில் இலவச அறிவிப்புகள் தான் ஏராளம் என்று தெரிவித்துள்ளார்.