வயசுப்பசங்க கொரோனா தடுப்பூசி போட்டா பிரச்னையா…?
18 வயது முதல் 22 வரை உள்ளவர்கள் குறிப்பிட்ட வகையான கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளக்கூடாது என்று அதை கண்டுபிடித்த விஞ்ஞானியே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் எங்கும் இன்னமும் சுற்றிக் கொண்டு இருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல நாடுகள் இதை ஒரு இயக்கமாகவே கொண்டு சென்று இருக்கின்றன.
சிலநாடுகளில் அனைவருக்கும் தடுப்பூசி போட்டாச்சு… என்று கூறி மாஸ்க் அணிய வேண்டாம் என்ற அறிவிப்புகளும் வெளியாகிவிட்டது. நிலைமை இப்படி இருக்க… 18 வயது முதல் 22 வரை உள்ளவர்கள் குறிப்பிட்ட வகையான கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளக்கூடாது என்று அதை கண்டுபிடித்த விஞ்ஞானியே ஒரு குண்டை போட்டு தாக்கி உள்ளார்.
அவரது பெயர் டாக்டர் ராபர்ட் மலோன். இவர் தான் கொரோனா தடுப்பூசிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் எம்ஆர்என்ஏ தொழில்நுட்பத்தை (mrna technology) கண்டுபிடித்தவர். 30 வயசுக்கு கீழே உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் இதய அழற்சி பிரச்னை உருவாகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
30 வயசுக்கு கீழ் உள்ள நபர்கள் பைசர், மாடர்னா நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளை போட்டால் இந்த பிரச்னை உருவாகிறது என்பது தெரிய வந்திருக்கிறது. கிட்டத்தட்ட 500 பேருக்கு இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தடுப்பூசி மூலம் ஏற்படும் அபாயத்தை அரசுகள் வெளிப்படையாக கூறவில்லை என்று டாக்டர் ராபர்ட் மலோன் கூறி இருக்கிறார். எனவே தடுப்பூசி போட்டுக் கொள்ளணுமா? வேண்டாமா? என்பதை அவரவர் விருப்பத்துக்கே விட்டுவிட வேண்டும். யாரையும் எக்காரணம் கொண்டும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூறுகிறார் இந்த விஞ்ஞானி…!