அரையாண்டு தேர்வு இல்லை…! திடீர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
சென்னை: பள்ளி அரையாண்டுத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
மிக்ஜாம் புயல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை புரட்டி போட்டுள்ளது. பாதிப்புகளை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் அதே பட்சத்தில் மக்களும் இயல்பு வாழ்க்கையை நோக்கி மெல்ல மெல்ல நகர ஆரம்பித்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6000 ரூபாய் நிதி உதவியை தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இந் நிலையில் மேலும் ஒரு புதிய அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டு உள்ளது.
அதன்படி, நாளை மாநிலம் முழுவதும் நடக்க இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மழையால் நனைந்து சேதம் அடைந்து இழந்துள்ளதாலும்,மாணவர்களின் நலன் கருதியும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
நாளைக்கு பதில் புதன்கிழமை முதல் தேர்வுகள் தொடங்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது. புதிய தேர்வு அட்டவணையை வெளியிடவும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. முன்னதாக மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் செவ்வாய்கிழமை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.