அரசியலை விட்டு விலகுகிறேன்…! எகிறி அடித்த சின்னவர்
அரசியலை விட்டு விலகி விடுகிறேன் என்று ஒரு போட்டோவை தொண்டர்கள் மத்தியில் காட்டி பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் எடப்பாடிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தேர்தல் வந்தாலே அது ஒரு திருவிழாதான். யார் என்ன பேசுவார்கள், எப்படி பேசுவார்கள் என்றே கணிக்க முடியாது. அதிலும் பிரச்சாரத்தில் எல்லாம் வேறு லெவலில் பேச்சுகள் போய் கொண்டு இருக்கும்.
அதுபோன்ற பிரச்சாரங்கள் சில நேரங்களில் மக்களை அதிகம் ஈர்ப்பதும் உண்டு. லேட்டஸ்ட்டாக செங்கல் எய்ம்ஸ் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் வார்த்தை போர் வெடித்து இருக்கிறது.
எடப்பாடிபோட்டோவில் சிரிப்பதை காட்டி உதயநிதி பிரச்சாரம் செய்ய, அதற்கு பதிலடியாக ஒரு போட்டோவை காட்டி ஈபிஎஸ் தரப்பு அதிரடி காட்டியது. அட… இது சூப்பர் பிரச்சாரமா இருக்கே என்று மக்கள் ஒரு பக்கம் யோசித்தபடி இருக்கே, வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்காக பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் மீண்டும் ஒரு போட்டோவை காட்டி திக்குமுக்காட வைத்துள்ளார்.
சசிகலா காலில் தவழ்ந்து சென்றபடி ஆசிர்வாதம் வாங்கும் அந்த போட்டோ தான் அது. நான் கையில் வைத்திருக்கும் இந்த போட்டோ மாதிரி, ஒரு போட்டோவில் நான் இருப்பது மாதிரி காட்டுங்கள், அரசியலைவிட்டு விலகி விடுகிறேன் என்று சவாலும் விட்டுள்ளார்.
இதை கெட்டியாக பிடித்துக் கொண்டு உதயநிதியின் உடன்பிறப்புகள்.. பாத்தியா, அண்ணன் கெத்தெ என்று கொண்டாடி தீர்க்கின்றனர். பாருங்க… அடுத்து என்ன நடக்க போகுதுன்னு என்று அதிமுகவினர் வேறு ஏதேனும் போட்டோ கிடைக்குமா என்று தேடிக் கொண்டு இருக்கின்றனர். மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசாமல் ஆளாளுக்கு ஒரு போட்டோவை காட்டி செல்வதுதான் பிரச்சாரமா? என்று நடுநிலை அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும் அந்த வீடியோவை தான் திமுக IT WING எடிட் செய்து மாஸ் காட்டி சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். அந்த வீடியோவை செய்தியின் கீழே காணலாம்….!