வந்தாச்சு குட் நியூஸ்…! ஸ்ரீவைகுண்டம் 1000 பேரின் நிலை…!
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தவித்த பயணிகள் வெகு பத்திரமாக மீட்கப்பட்டு, பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
தென்மாவட்டங்களை புரட்டி எடுத்த அதி கனமழையின் பாதிப்புகள் என்பது ஏராளம். எங்கு பார்த்தாலும் வெள்ளம், மின்சாரம் துண்டிப்பு, மக்கள் அவதி என்ற நிலையே நீடித்தது. மாநில அரசு நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் மீட்பு பணிகளில் சுறுசுறுப்பாகி இயங்கி மக்களை மீட்டு வந்தன.
ஆனால், கனமழை பாதிப்பால், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்து உள்ளது தாதன்குளம். இங்கு மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளத்தின் கீழ் பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அந்தரத்தில் தண்டவாளம் தொங்கியபடி இருக்க, கடந்த 17ம் தேதி திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற பயணிகள் ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
ஹெலிகாப்டர் மூலம் அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு, ரயில் நிலையம் பகுதியில் இறங்க முடியாமல் சுற்றி சுற்றியே வந்த நிலை காணப்பட்டது. இந் நிலையில் ஸ்ரீவைகுண்டம் ரயிலில் இருந்து பயணிகள், இடுப்பளவு வெள்ள நீரில் 2 கிமீ நடந்தபடியே வெள்ளூர் கிராமம் அழைத்து செல்லப்பட்டனர்.
பின்னர் அங்கு அவர்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட 6 பேருந்துகளில் மணியாச்சி ரயில் நிலையம் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து, சிறப்பு ரயிலில் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.