தமிழகத்தில் ‘அந்த’ ரூ.110 கோடி...! கவலையில் பிரதமர் மோடி...!
டெல்லி: பிரதமரின் கிசான் திட்டத்தில் தமிழகத்தில் 110 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்துள்ள சம்பவத்தில் பிரதமர் மோடி, தமிழகம் மீது கடும் அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் பிரதமரின் கிசான் திட்ட விவகாரம் பெரும் புயலையும், அதிர்ச்சியையும் கிளப்பி உள்ளது. அங்கே தொட்டு, இங்கே தொட்டு கடைசியில் கிசான் திட்டத்தில் கிளம்பிய ஊழல் முறைகேடு விவகாரம் மத்திய அரசை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து தமிழக சிபிசிஐடி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்டம் தோறும் கைதுகளும் அரங்கேறி வருகின்றன. ஆனால் இந்த விசாரணை போதுமானதாக இல்லை. சிபிஐ வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளன.
எனது கனவு திட்டத்தில் இப்படி கை வைத்துவிட்டார்களே என்று பிரதமர் மோடி கவலையில் உள்ளதாக டெல்லியில் இருந்து வெளியாகும் தகவல்கள் கூறுகின்றன. விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்ட திட்டத்தில் தமிழகம் ஊழலுக்கு வழி சொல்லிவிட்டதே என்றும் தமிழக பாஜகவினரும் கடுப்பில் உள்ளனராம்.
ஆகையால் அதில் சம்பந்தப்பட்ட ஒருவரையும் விடக்கூடாது என்று தமிழக உளவுத்துறையிடம் அனைத்து விவரங்களையும் பிரதமர் அலுவலகம் கேட்டுள்ளதாக தெரிகிறது. மத்திய அரசின் சில வழிமுறைகள் தான் ஊழல் ஏற்பட காரணம் என்றும், தமிழக அரசின் தரப்பில எந்த தவறும் இல்லை என்றும் டெல்லிக்கு மெசேஜ் தட்டிவிடப்பட்டுள்ளதாம்.
ஆனால் அது ஏற்கப்படவில்லை என்று தெரிகிறது. விரைவில் முழு விவரங்களும் வெளியாகும் என்பதால் ஊழலில் ஈடுபட்டவர்கள் கலக்கத்தில் உள்ளனராம்.