செருப்பு…! பிடிஆரை பொளந்த அண்ணாமலை…!
சென்னை: என் செருப்புக்குக் கூட நீங்கள் ஈடானவரில்லை என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இன்றுள்ள தமிழக அரசியலில் ஏழாம் பொருத்தம் யாருக்கு என்றால் அது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் தான். கட்சி,ரீதியாக அரசியல் ரீதியாக இருந்த இந்த போர், இப்போது தெருச்சண்டை ரேஞ்சுக்கு போயிருக்கிறது.
உங்களை ஏன் ஆடு என்று குறிப்பிடுகிறேன், பெயர் சொல்வதில்லை என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒரு டுவிட்டர் பதிவை போட்டு வைக்க… அதற்கு செமத்தியான பதிலடியை தந்திருக்கிறார். அந்த பதிவு மரியாதைக் குறைவாக இருப்பது வேற ரகம்.
அண்ணாமலை தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது: திருவாளர் பிடிஆர், உங்க பிரச்னை என்னவென்றால், பெரிய பரம்பரையில் பிறந்தவர் என்பதை தவிர வேறு என்ன பயனுள்ளதை செய்துள்ளீர்கள்?
நீங்கள் அரசியலுக்கும், தமிழகத்துக்கும் சாபக்கேடு. உங்களை போன்று பெரிய விமானத்தில் பயணிக்காத என்னை போன்ற சீரான மூளை, வாழ்க்கை கொண்ட நபர்களும் வாழ்கிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
என் செருப்புக்கு கூட நீங்கள் தகுதியானவர் இல்லை. உங்களை போல் கீழ்தரமாக நான் எதையும் செய்யமாட்டேன் என்று கூறி உள்ளார்.