கோவையில் மட்டன் பிரியாணியாமே…! திமுக சூப்பர் வீடியோ
சுவையான மட்டன் பிரியாணி போடனும்னு சொன்னேன், நிச்சயமான வெற்றி காத்திருக்கிறது என்று அமைச்சர் டிஆர்பி ராஜா, அண்ணாமலையை கலாய்த்து தள்ளி இருக்கிறார்.
பாஜக தமது முதல்கட்ட தமிழக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில் அக்கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்த்தது போல அண்ணாமலை கோவை தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இதை முன்னரே ஊகித்த திமுக, எப்படியும் அவரை தோற்கடித்தே தீருவது என்ற ஒரே முடிவில் பிளான் போட்டு வருகிறது. தேர்தல் ஜெகஜாலங்களை ஏற்கனவே முடிவு பண்ணியாச்சு என்று உடன்பிறப்புகள் காதில் கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டனர்.
அண்ணாமலை பெயர் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், திமுக அதை செமையாக கலாய்த்து தள்ளி இருக்கிறது. அக்கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் கோவையில் நடந்திருக்கிறது. அதில் அமைச்சர் டிஆர்பி ராஜா பேசி இருக்கிறார்.
அவர் கோவையில் சுவையான மட்டன் பிரியாணி என்று பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். டிஆர்பி ராஜா பேசி உள்ளதாவது;
தேர்தல் முடிஞ்சவுடன் நிச்சயமா பிரியாணி போடுவதாக சொல்லி இருந்தோம். இப்ப தான் நியூஸ் வந்துச்சு, மட்டன் பிரியாணியாமே? அதனால சுவையான ஆட்டு பிரியாணி ரெடியாக இருக்கிறது.
மகத்தான வெற்றி இந்த கோவைக்கு காத்திருக்கிறது.நன்றி வணக்கம் என்று பேசி சென்றுள்ளார்.
அவரின் இந்த குறிப்பிட்ட பேச்சை மட்டும் திமுக தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. அந்த வீடியோ செய்தியின் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.