#GoBackModi இதோ… ரெடியான தமிழக மக்கள்
தூத்துக்குடி வெள்ள பாதிப்பை பார்வையிட வராத பிரதமர் மோடிக்கு எதிராக #GoBackModi trending ஆகி வருகிறது.
தமிழகத்தில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என்று முட்டி மோதி வரும் பாஜக, தமக்கு கிடைத்த அரிய வாய்ப்பான மழை, வெள்ள பாதிப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை.
தமிழக அரசின் வேண்டுகோள், வலியுறுத்தல்களுக்கு முன்பாக மத்திய அமைச்சர்கள் குழு அல்லது வேறு ஏதேனும் முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்டோரை தமிழகம் அனுப்பி நிலைமையை பார்வையிட வைத்து, நாங்கள் தான் முதலில் வந்தோம், எங்களுக்கு தான் உங்களை விட அக்கறை என்று கூற வைத்திருக்கலாம்.
ஆனால் அப்பன் வீட்டு காசா என்று அமைச்சர் உதயநிதி போட்டு தாக்க, அப்பன், ஆத்தா வீடு என முகத்தில் ஆயிரம் கிலோ கடுகை தாளித்தது மாதிரி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி வைக்க.. ஒட்டு மொத்த தமிழக மக்களும் மத்திய பாஜக மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
மக்களின் pulse தெரியாமல் எப்படி கட்சியை வளர்ப்பது என்று அடிமட்ட பாஜக தொண்டர்கள் புலம்பி வர… இப்போது லேட்டஸ்ட்டாக பிரதமர் மோடி வரும் 2ம் தேதி தமிழகம் வருகிறார்.
திருச்சி விமான நிலையத்தில் 1200 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டு உள்ள புதிய முனைய திறப்பு விழாவுக்கு வருகிறார், முனையத்தை திறந்தும் வைக்கிறார்.
பிரதமர் மோடியின் வருகை பற்றிய தகவல் வெளியான நிலையில் டிரெண்டிங்கும் எகிற ஆரம்பித்துள்ளது. அவரின் வருகைக்கு இன்னும் நாட்கள் பல இருக்க… இன்று #GoBackModi டிரெண்டிங்காகி விட்டது.