4 ஆண்டு சிறை…? ஜெயிலுக்கு போகும் பொன்முடி…! பகீர் தகவல்
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக கிட்டத்தட்ட ரூ.1.75 கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி, மனைவி விசாலாட்சி மீது 2006ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட இவ்வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்தது.
ஆனால் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றம் மேல்முறையீடு செய்தது. வழக்கில் பொன்முடியின் விடுதலையை ரத்து செய்ததோடு அவர் குற்றவாளி என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இன்று பொன்முடி நீதிமன்றம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு அவருக்கான தண்டனை விவரங்களையும் அறிவித்துள்ளது.
பொன்முடிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் விதிக்கு என்று திமுக மேல் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது. தண்டனை அறிவிக்கப்பட்டால் அவர் தமது அமைச்சர் பதவியை கட்டாயம் இழப்பார். முன்னதாக அவர் தமது காரில் பொருத்தப்பட்டு இருந்த தேசியக் கொடியை அகற்றிவிட்டார்.
பொன்முடிக்கு சிறை தண்டனை என்பது நிச்சயம் என்பதை அறிந்தது, திமுக தலைமை கடும் அதிர்ச்சிக்கு இருக்கிறது. சட்ட ரீதியாக அவரை எதிர்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ள கட்சி தலைமை, அவரின் அமைச்சர் பதவியை யாருக்கு தருவது என்பது குறித்து விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது.