மீண்டும் ஆம்னி பஸ் போக்குவரத்து தொடக்கம்…? எப்போது தெரியுமா..?
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்து போக்குவரத்து தொடங்குகிறது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தொற்று பாதிப்பு குறைவாக பதிவாகி உள்ள 27 மாவட்டங்களில் போக்குவரத்துக்கு அனுமதி தரப்பட்டு உள்ளது.
பொது போக்குவரத்து நடைமுறைக்கு வந்துள்ளதால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தொலைதூர அரசு பேருந்துகள் இயக்கம் தொடங்கி உள்ளன.
இந் நிலையில் நாளை முதல் (ஜூலை 1) ஆம்னி பேருந்து போக்குவரத்து தொடங்க உள்ளது . இதற்கான அறிவிப்பை ஆம்னி போக்குவரத்து சங்கத்தினர் அறிவித்துள்ளனர். பொருளாதார நிலைமையின் எதிரொலியாக காலாண்டு வரி விலக்குக்காக பேருந்துகளை இயக்குவது இல்லை என்று அறிவித்து இருந்தனர்.
இன்று அந்த காலாண்டு காலம் முடிவதால் நாளை முதல் மீண்டும் ஆம்பி பேருந்துகள் இயங்க உள்ளன. கொரோனா வழிமுறைகளுடன் பேருந்துகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.