Sunday, May 04 11:58 am

Breaking News

Trending News :

no image

சரக்கு வேணுமா..? கொரோனா தடுப்பூசி போட்டுட்டு வா..! மதுக்கடைகளில் புது ரூல்


திருவனந்தபுரம்: மதுபானம் வாங்க வருவோர் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

எங்கே என்ன நடந்தாலும் சிறிதளவாவது கொஞ்சம் மதுபானம் உள்ளே போனால் தான் சிலருக்கு தூக்கமே வரும். அண்டை மாநிலமான கேரளாவும் இதுக்கு விதிவிலக்கு அல்ல.

அங்கு இன்னமும் கொரோனா 2வது அலையின் தாக்கம் சற்றும் குறையவில்லை. நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை உச்சத்துக்கு தான் போய் கொண்டிருக்கிறது.

நாட்டின் ஒருநாள் பாதிப்பில் 50 சதவீதம் கேரளாவில் தான் என்பது புள்ளிவிவரம் கூறும் செய்தியாகும். ஆகையால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கேரள அரசு பகீரதபிரயத்தனம் செய்து வருகிறது.

கடைகள், வர்த்தக நிறுவனங்கள் செயல்பட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மதுக்கடைகள், மதுபிரியர்களுக்கு என ஏகப்பட்ட ரூல்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதில் முக்கியமான ஒன்று, மதுபானம் வாங்க வருவோர் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று தான் அது. இந்த நடைமுறை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று பாதித்து ஒரு மாதம் கழிந்த பின்னரே கடைக்கு வரவேண்டும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. மாநில அரசின் இந்த அதிரடியான கட்டுப்பாடு, மதுப்பிரியர்களை சோகம் கொள்ள செய்துள்ளது.

Most Popular