தமிழகத்தில் இனி வெளிமாநில நபர்களுக்கு அரசு வேலையா…? அமைச்சர் 'ஹேப்பி' நியூஸ்
சென்னை: 10 ஆண்டுகளில் எந்த சட்டத்தில் வெளி மாநில நபர்களுக்கு அரசு வேலை தரப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து, அது தவிர்க்கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறி உள்ளார்.
சட்டசபையில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பண்ருட்டி எம்எல்ஏவான வேல்முருகன் சில பிரச்னைகள் பற்றி பேசி அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நீட் தேர்வு காரணமாக அனிதா போன்று பலர் பலியாகி உள்ளனர், எனவே நீட் தேர்வை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரினார். தமிழகத்தில் வேற்று மாநிலத்தவர் அதிகம் பேர் அரசு பணியில் சேர்ந்து உள்ளனர் என்றும் புகார் தெரிவித்தார்.
இதற்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து பேசியதாவது: தமிழகத்தில் வேறு மாநிலத்தவர்கள் எப்படி அரசு பணி பெற்றனர்? எந்த சட்டத்தின்படி பெற்றனர், மாற்றப்பட்ட வழிமுறைகள் என்ன என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். அதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தின் தற்போதைய கடன் நிலவரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறினார்.