உலகிலேயே முதல் முறை…! சீனாவில் மனிதனை தாக்கிய ‘புது’ வைரஸ்…! மக்கள் பீதி
பெய்ஜிங்: சீனாவில் முதல் முறையாக பறவை காய்ச்சலின் புதிய வேரியண்ட் மனிதனை தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனாவின் தாக்கம் மனித குலத்தை இன்னமும் அச்சுறுத்தி வருகிறது. உலகின் அனைத்து நாடுகளம் திக்கி திணறிக் கொண்டு இருக்க, பாதிப்புகள் இன்னமும் குறையவில்லை.
அதற்குள் அதே சீனாவில் வேறு ஒரு புதிய வைரஸ் மனிதனை தாக்கி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. உருமாறிய பறவை காய்ச்சலால் முதல் முறையாக மனிதர் ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சீனாவின் ஜியாங்சு என்ற மாகாணத்தில் பறவை காய்ச்சல் H10N3 என்ற வேரியண்டால் அவர் பாதிக்கப்பட்டு உள்ளார். பொதுவாக மனிதர்களுக்கு இந்த வகையான காய்ச்சல் பரவாது. இப்போது சீனாவில் முதல் முறையாக இந்த வகையாக காய்ச்சல் பரவி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட நபரை மிகவும் உன்னிப்பாக மருத்துவக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர். கோழி அல்லது வேறு ஏதேனும் பறவையினங்களில் இருந்து காய்ச்சல் அவருக்கு தொற்றி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.