4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…! எல்லாம் மழை மாயம்..!
சென்னை: கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தென்மேற்கு பருவமழை வேகம் எடுத்துள்ளதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக நீலகிரியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இடைவிடாத மழையால் கூடலூர், பந்தலூர், நாடுகாணி உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
அடித்து ஊத்தும் கனமழை காரணமாக நீலகிரியில் ரெட் அலர்ட் எடுக்கப்பட்டு உள்ளது. தொடர் மழையால் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சிறுமலை பகுதிகளில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. கோவை மாவட்டம், வால்பாறை, தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.