கேப்டன் சமாதியில் தேம்பி, தேம்பி அழுத பிரபல நடிகர்..! உலக நடிப்புடா சாமி
கேப்டன் விஜயகாந்த் சமாதியில் தேம்பி அழுத நடிகர் சூர்யாவை அடித்து துவைத்து வருகின்றனர் இணையவாசிகள்.
திரையுலகத்தின் பெரிய இழப்பு கேப்டன் விஜயகாந்த். அரசியலில் கால் பதித்து பாதி வெற்றி கண்ட அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அண்மையில் காலமானார்.
பெரும் அதிர்ச்சியையும், கண்ணீரையும் வரவழைத்த அவர் மரணத்தின் தாக்கம் இன்னமும் பலருக்கு குறையவில்லை. திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். திரையுலகில் சில முக்கிய நடிகர்கள் வெளிநாடுகளில் படப்பிடிப்பில் மாட்டிக் கொண்டதால் அவர்களால் நேரில் அஞ்சலிக்கு வரவில்லை.
அந்த பட்டியலில் உள்ளவர் நடிகர் சூர்யா. வெளிநாட்டில் ஷூட்டிங்கில் இருந்ததால வராமல் போனதாக அவர் இரங்கல் வீடியோ ஒன்றை போட்டார். அதுவும் எப்படி… ஓடுகின்ற காரில் உள்ளே ஜம்மென்று உட்கார்ந்து கொண்டு…!
மிகச்சிறந்த நடிகர், மனிதநேய பண்பாளர் என பல பெருமைகளை கொண்ட கேப்டன் விஜயகாந்துக்கு இப்படியா மரியாதையின்றி இரங்கல் தெரிவிப்பது என்று கடும் கண்டனங்கள் எழுந்தன. எக்ஸ் வலைதள பக்கத்தில் சூர்யாவை புரட்டி எடுத்தனர்.
இந் நிலையில், வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த சூர்யா, விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அங்கு அவர் தேம்பி. தேம்பி அழுது தமது சோகத்தை பதிவு செய்தார்.
பின்னர் நடிகர் சூர்யா பேசியதாவது; விஜயகாந்த் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள முடியாதது வருத்தமான ஒன்று. பெரியண்ணா படத்தின் போது விஜயகாந்துடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றேன். ஒரு சகோதரனாக என்னிடம் பழகி அன்பு காட்டியவர் என்று உருக்கமுடன் கூறினார்.
நடிகர் சூர்யா பேட்டி கண்ட ரசிகர்கள் பொங்கி தள்ளி விட்டனர். ஷூட்டிங்க முடிஞ்சி போச்சி, எல்லாம் கிளம்புங்க… இதுதான் உங்க கண்ணீர் அஞ்சலியா? சூர்யா… உடம்பு சரியில்லா இருக்கும் போது ஒருத்தனும் பார்க்கல என்று விமர்சித்து தள்ளிவிட்டனர்.
ஓடும் காரில் உட்கார்ந்து, வீடியோ வெளியிட்டு விஜயகாந்த் இரங்கலை அவமதித்ததாகவும் அவர்கள் போட்டு தாளித்து வருகின்றனர். நடிப்பு என்றால் இதுதான் என்றும் காய்ச்சி தள்ளி இருக்கின்றனர்.