Sunday, May 04 12:27 pm

Breaking News

Trending News :

no image

உதயநிதியின் அண்ணன்…! முதல்வர் ஸ்டாலின் சொன்ன ரகசியம்


சென்னை: உதயநிதியுடன் வெளியில் சென்றால் எங்கள் இருவரையும் அண்ணன், தம்பி என்பார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலான பகுதிகளில் வசிப்போரும், அவர்களின் குழந்தைகளும் விளையாடுவதை ஊக்குவிக்கும் வகையில் அண்ணாநகர் பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

முக்கியமான சாலைகளில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் விளையாடவும், உடற்பயிற்சி செய்யவும் அப்போது அனுமதி தரப்படுகிறது.

இன்று அவ்வாறு நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். மக்களோடு மக்களாக டேபிள் டென்னிஸ், இறகு பந்து ஆகிய விளையாட்டுகளை விளையாடி அசத்தினார். பின்னர் சைக்கிளையும் ஓட்டி சென்றார்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலகலப்பாக பேசினார். அவர் கூறியதாவது: கொரோனாவில் இருந்து முழு குணமடைய தமது உடல்நலனே காரணம். ஆரோக்கியமான உடலுக்கு உடற்பயிற்சி ரொம்ப முக்கியம்.

தற்போது எனக்கு 70 வயது ஆகிறது. இதை யாரும் நம்ப மாட்டீர்கள், நானும், மகன் உதயநிதியும் வெளியில் சென்றால் அண்ணன் தம்பி என்று கூறுவார்கள் என்று கூறினார்.

Most Popular