மனுவை ரோட்டில் வீசினாரா…? அண்ணாமலை இப்படி செய்யலாமா..?
பொதுவாக அதிகாரிகளிடம், மக்கள் பிரதிநிதிகளிடம், அல்லது குறிப்பிட்ட அரசியல் பிரமுகர்களிடம் பொதுமக்கள் மனு கொடுத்தால் என்ன நடக்கும்? அதை பெற்றுக் கொண்டு பரிசீலனை செய்வதாக அல்லது என்னவென்று பார்க்கிறேன் என்றும் பதில் கிடைக்கும்.
ஆனால் ஒரு பெண் கொடுத்த மனுவை வாங்கிய கட்சியின் முக்கிய பிரமுகர், நாடாளுமன்ற வேட்பாளர் அதை ரோட்டில் வீசிவிட்டு சென்றால் எப்படி இருக்கும்-
இப்படி ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார் கோவையின் பாஜக நாடாளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை. மேலிடத்தின் அன்பு கட்டளையோ அல்லது உத்தரவோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் அண்ணாமலை. அவரின் செயல்பாடுகள், அரசியலுக்கு மேலிடம் தந்த சான்ஸ் என்று அவரது ஆதரவாளர்கள் இன்னமும் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
அதே உற்சாகம், கொண்டாட்டம், ஆரவாரத்துடன் கோவை வந்த அண்ணமாலைக்கு ஏர்போர்ட்டில் தொண்டர்கள், ஆதரவாளர்கள் ஏக வரவேற்பு அளித்தனர் என்பது தனி. ஆனால் இப்போது மக்களை சந்திக்க புறப்பட்டுள்ள அண்ணாமலை மீது சர்ச்சை ஒன்று எழுந்துள்ளதுதான் புதுக்கதை.
கோவையில் அவர் வாக்காளர்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபடும் போது, பெண் ஒருவர் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை தந்தார். பின்னர் அண்ணாமலையிடம் மனு ஒன்றையும் தந்துள்ளார். மனுவை அண்ணாமலையும் வாங்கி தமக்கு பின்னால் இருப்பவரின் தர, அவரும் அவருக்கு பின்னால் இருக்கும் கட்சி நிர்வாகிக்கு தருகிறார்.
அதன் பின்னர் மனு கொடுத்த பெண் நடந்து சென்ற போது, அவர் அண்ணாமலையிடம் தந்த மனு, வேறு ஒரு தெருவில் கிடந்ததாக அதை சிலர் தம்மிடம் கொடுத்ததாக கூறினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பும், அதிருப்தியும் அடைந்துள்ளார். மனு மீது நடவடிக்கை எடுக்காவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் இப்படி insult செய்யலாமா அண்ணாமலை என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இவர் எப்படி 700 நாட்களில் கோவையை வளர்ச்சி அடைய வைப்பார் என்ற விமர்சனமும் இதே கருத்துடன் இலவச இணைப்பாக வந்து சேர்ந்திருக்கிறது.