பட்டியலின மக்களை கேவலமாக பேசிய இளம் நடிகை…! பரபர வீடியோ
சென்னை: பட்டியலின சமூக மக்களை பற்றியும், திரைத்துறையில் இருக்கும் பட்டியலின இயக்குநர்கள் படு கேவலமாக பேசி வீடியோ வெளியிட்டு உள்ளார் மீரா மிதுன்.
ஒண்ணும் பெரிய நடிகை கிடையாது…. திரையுலகில் எதுவும் சாதித்ததும் கிடையாது. ஆனால் பேச்சு மட்டும் அடுத்தவரை அவமானப்படுத்தும் விதமாக, கேவலமாக இருக்கும். அவர் தான் இளம் நடிகை மீரா மிதுன்.
பிக் பாஸ் சீசனுக்கு முன்னர் இவரை யார் என்றே தெரியாது. ஆனால் பிக் பாஸ் வெளிச்சத்தில் கிடைத்த பெயரை கொண்டு தாம் ஒரு சூப்பர் டூப்பர் மாடல் என்று தம்மை தானே பீற்றிக் கொள்பவர் மீரா மிதுன்.
அடிக்கடி ஏதாவது வாய்க்கு வந்தபடி உளறி தள்ளுவது, தாம் சூப்பர் நடிகை என்பது போல பில்டப் கொடுப்பது, திரை உலகமே தமக்காக காத்திருப்பது என ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி கொள்வது இவரது வழக்கம். அழகி போட்டி நடத்துவதாக கூறி பலரை இவர் ஏமாற்றினார் என்று குற்றச்சாட்டுகளும் எழுந்து பரபரப்பை கிளப்பின.
இப்போது லேட்டஸ்டாக இவர் பேசி உள்ள காணொளி பெரும் வம்பில் கொண்டு போய் விடும் நிலையை உருவாக்கி இருக்கிறது. நடிகைகள் நயன்தாரா, ப்ரியா ஆனந்த், இளம் பாடகி தீ (dhee) ஆகிய பிரபலங்கள் தமது முகத்தை பயன்படுத்தி வருவதாக கூறினார்.
அது பற்றி அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் பட்டியலின மக்கள் பற்றியும், அவர்களின் வாழ்க்கை முறைகள் பற்றியும் கேவலமாக பேசி இருக்கிறார்.
பட்டியலின மக்கள் கெட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள், கிரிமினல்கள் பின்புலம் உள்ளவர்கள் என்று கூறி உள்ளார். பட்டியிலன சமூகத்தை சேர்ந்தவர்கள், திரைப்பட இயக்குநர்கள், பிரபலங்கள் இப்படி எல்லாமே செய்கிறார்கள்.
இப்படிப்பட்ட பட்டியலின இயக்குநர்கள், பட்டியலின பிரபலங்களை சினிமாவை விட்டே துரத்த வேண்டும், அதற்கான நேரம் வந்துவிட்டது என்று பேசி இருக்கிறார்.
அவரின் இந்த காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பட்டவர்த்தனமாக பட்டியலின சாதி பெயரை சொல்லி பேசுவது ஏற்க முடியாது, தமது இழிவான பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டனங்கள் எழுந்துள்ளன.