Sunday, May 04 12:55 pm

Breaking News

Trending News :

no image

பிஎஸ்பிபி பள்ளியில் 5 ஆண்டுகளாக ‘அதையே’ வேலையாக செய்த ராஜகோபாலன்…!


சென்னை: பிஎஸ்பிபி பள்ளியில் 5 ஆண்டுகளாக மாணவிகளிடம் ஆசிரியர் ராஜகோபாலன் பாலியில் தொல்லையில் ஈடுபட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சென்னையில் பிரபலமான பள்ளியாக விளங்குவது கேகே நகரில் உள்ள பிஎஸ்பிபி பள்ளி. இந்த பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் நடந்ததாக எழுந்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மாணவிகளை பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், ஆபாசமாக பேசுவதாகவும் புகார்கள் எழுந்தன. ஆன்லைன் வகுப்பில் அரை நிர்வாணமாக வந்துதான் எப்போதும் மாணவிகளுக்கு பாடம் எடுப்பார் என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.

வாட்ஸ் அப்பில் ஆபாச சேட்டை, இரவு நேர போன்கால் என மாணவிகளை பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக புகார்கள் வெடித்து கிளம்பின. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் அரசு தலையிட விவகாரம் வழக்காக பதிவானது.

இதையடுத்து, குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர் ராஜகோபாலன் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக மாணவிகளிடம் சில்மிஷம் செய்வது, ஆபாசமாக பேசுவது என பாலியல் சேட்டைகளை இஷ்டம் போல செய்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்த போது அனைத்து மெசேஜ்களையும் ராஜகோபாலன் அழித்துவிட்டதையும் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், அவருடன் தொடர்பில் இருந்த பல ஆசிரியர்களுக்கும் இதில் சம்பந்தம் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதில், ராஜகோபாலனுடன் யார், யார் எல்லாம் தொடர்பில் இருந்தார்களோ அவர்கள் எல்லாரும் தமது செல்போனில் இருந்த சில முக்கிய விவரங்களை அழித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராஜகோபாலனிடம் ஒரு பக்கம் விசாரணை நடந்து வரும் அதே வேளையில் மறுபக்கம் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த போலீசார் தயாராகி வருகின்றனர். ஆசிரியர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Most Popular