நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு சிக்கலா…? என்னாகும் ரூ.75 கோடி…!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 75 கோடி சம்பளம், 5 படங்களில் சன் பிக்சர்ஸ் புக் செய்திருக்க, இப்போது இயக்குநர்கள் யார் என்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவின் பெரிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். விடா முயற்சி, கடின உழைப்பு ஆகிய காரணங்களினால் உச்ச நடிகராக மாறியிருக்கிறார் அவர்.
தற்போது பெரிய பட்ஜெட் படங்களிலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அவருக்கு 75 கோடிகள் சம்பளம் பேசி 5 படங்களில் நடிக்க பேசியிருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். 5 படங்களையும் முடிக்க ஓராண்டு என்பது திட்டம்.
ஆனால் பிற நிறுவனங்களின் படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் ஆரம்பித்து இருக்கிறார். அயலான் பெயரில் கேஜேஆர் ஸ்டுடியோசின் இணை தயாரிப்பில் நடித்து வருகிறார். ஊரடங்கால் அவரது டாக்டர் படம் டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியிட தயாராக உள்ளது.
நல்ல தொகை தருவதாக பேசி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் படத்தின் சாட்டிலைட் உரிமை சன் பிக்சர்ஸ் இடம் உள்ளதால், ஓடிடியில் வெளியிடாமல் உள்ளது.
நிலைமை இப்படி இருக்க நடிகர் சிவகார்த்திகேயனுடன் 2 ஆண்டுகள், 75 கோடி சம்பளம் என்று புதிய கணக்குகடன் ஒப்பந்தம் செய்ய சன் பிக்சர்ஸ் தயாராக உள்ளதாக தெரிகிறது. ஆனால் இயக்குநர்கள் யார் என்று தெரியாததால் தொடர்ந்து இறுதி முடிவாகாமல் நிலைமை இருக்கிறது.