கமல்ஹாசன் காசு வாங்கிட்டாரு…? முன்னாள் நிர்வாகி வெளியிட்ட ‘பகீர்’ தகவல்…!
சென்னை: சட்டசபை தேர்தல் செலவுக்காக கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கியதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் நிர்வாகி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் வலம் வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. அந்த அளவுக்கு நிகழ்ச்சி ஏக பிரபலம். பிக் பாஸ் மேடையில் கமல் அரசியலும் பேசுவார்.
தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், அடுத்து வரக்கூடிய பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் தயாராகிவிட்டார் என்றும், அதற்கான பணத்தை முன்பணமாக தேர்தலுக்கு முன்பே கமல் வாங்கிக் கொண்டு விட்டார் என்றும் முன்னாள் நிர்வாகி ஒருவர் கூறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேர்தல் செலவுகளுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கமல் பணத்தை பெற்றுக் கொண்டு விட்டார், எனவே இந்த முறையும் அவர் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றும் மநீமவில் இருந்து விலகிய அந்த நிர்வாகி கூறியதாக தகவல்கள் பரபரக்கின்றன.