ஈஷா யோகா மையத்தில் ‘திடுக்’ சம்பவம்…! களத்தில் இறங்கிய போலீஸ்
கோவை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. இந்த மையத்தில் ஆந்திராவை சேர்ந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். அவரின் பெயர் ரமணா.
இது குறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா மையம் வந்ததாகவும் அதன் பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்றும் தெரிகிறது.