வடிஞ்சிச்சி விடிஞ்சிச்சின்னு வந்தீங்க, ... பிஞ்சிச்சி, அம்புடுதேன்
சென்னை: சென்னையில் எல்லா பக்கமும் தண்ணி சூழ்ந்திடுச்சு, ஆனால் சிஐடி காலனியில் ஏன் தேங்கல என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல், கனமழை சென்னையை தலைகீழாக்கி விட்டுவிட்டு சென்றிருக்கிறது. வெளிநாடுகளில் மழை பெய்தால் எப்படி வெள்ளப் பெருக்கு ஏற்படுமோ அதே நிலை தான் இப்போது என்று மக்கள் பேச தொடங்கி இருக்கின்றனர்.
ஆனால், வெள்ளம் வடிந்துவிட்டது, அனைத்தும் சகஜ நிலையில் உள்ளதாக அரசு தரப்பும், அதிகாரிகளும் கூறி வருகின்றனர். அது யதார்த்தம், நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு உள்ளது என்று நடுநிலையாளர்கள் கூறினாலும் வெள்ள சேதம் என்பது மக்களை வெகுவாக பாதித்துள்ளது.
இந் நிலையில், நடிகை கஸ்தூரி வெளியிட்டு உள்ள ஒரு பதிவுதான் கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகிறது. அவர் ஒரு பதிவு வெளியிட்டு உள்ளார். அதில் தமது வீடு உள்பட பல பகுதிகளில் மழை தண்ணீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சிஐடி காலனியில் மழைநீர் தேங்கவில்லையே என்று சந்தேகம் எழுப்பி உள்ளார்.
https://twitter.com/KasthuriShankar/status/1731989539055395056
அவரின் இந்த பதிவு பெரும் பரபரப்பையும், நேர்மறையான கருத்துகளையும் வெளியிட வைத்துள்ளது. 2015ம் ஆண்டு மழை சேதத்தின் போது எங்கே போனீர்கள்? 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியிலும் மழை சென்னையை பிழிந்தெடுத்ததே? அதற்கு உங்கள் பதில் என்ன? என்று விளாசி தள்ள ஆரம்பித்துள்ளனர் நெட்டிசன்ஸ்.
அவருக்கு ஆதரவாக சிலர், எங்க வீட்டு பக்கத்திலும் தண்ணி தேங்கியிருக்கு? இதையும் பதிவாக போடுங்க என்று அட்ரஸ் முதற்கொண்டு அவருக்கு பதில் கூறி இருக்கின்றனர். ஆக, சமூக வலைதளங்களில் இப்படித்தான் பதிவுகளும், பதிலடிகளும் போய் கொண்டு இருக்கிறது.