Sunday, May 04 12:38 pm

Breaking News

Trending News :

no image

இன்றைய TOP 10 News…!


தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய TOP 10 முக்கிய செய்திகளை  பார்க்கலாம்:

சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கி பெரும் போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளதால் 4 நாட்கள் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

பராமரிப்பு காரணமாக, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் இரவு நேர ரயில் இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது.

வரும் 10 ஆண்டுகளுக்குள் யானைகளை பாதுகாக்காவிட்டால் அவற்றை பார்க்கவே முடியாத சூழல் நிலவலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் g squad  என்ற தமது புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளார். இதன் மூலம் நெருங்கியவர்கள், நண்பர்களின் படங்களை தயாரிக்க உள்ளதாக கூறி இருந்தார். அதன்படி உறியடி படத்தை இயக்கிய விஜயகுமார் படத்தை இயக்குகிறார்.

557வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

மேலும் 12 பிணைய கைதிகளை ஹமாஸ் இயக்கம் விடுவித்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.

இயக்குநர் பா. இரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இருக்கும் கள்ளிப்பாலில் ஒரு டீ என்ற ஆந்தாலஜி படத்தின் ட்ரெய்லர் இன்று ரிலீசாகிறது.

ஜூனியர் உலக கோப்பை மகளிர் ஆக்கி போட்டியில் இந்திய அணி, இன்று கனடாவை எதிர்கொள்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி உள்ளது. அதிரடி வீரர் மேக்ஸ்வெல் சதத்தின் மூலம் இந்தியாவை ஆஸி. அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

Most Popular