Sunday, May 04 12:25 pm

Breaking News

Trending News :

no image

கொரோனா… சீனா வெளியிட்ட 'பகீர்' தகவல்.. அலறிய உலக நாடுகள்...!


உகான்: புதிய வகை கொரோனா வைரஸ்களை கண்டறிந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது, உலக நாடுகளை ஒட்டு மொத்தமாக அதிர வைத்துள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரசின் தாக்கம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. 200க்கும் அதிகமான நாடுகளை புரட்டு போட்டு வருகிறது.

முதல் அலை முடிந்து, 2வது, 3வது அலை என்று உலகின் பல முன்னணி நாடுகள் தத்தளித்து வருகின்றன. தடுப்பூசி ஒரு பக்கம் இருந்தாலும், கொரோனாவின் தாக்கம் குறைந்தது போன்று தெரியவில்லை.

இப்போது இருக்கும் கொரோனா வைரசின் தாக்கமே போதும் என்று நிலைக்கு உலக நாடுகளை தள்ளி இப்போது புதியதாக கொரோனா வைரஸ்களை கண்டறிந்து உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

இது குறித்து சீனாவின் ஷான்டாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: 2019ம் ஆண்டு மே முதல் 2020ம் ஆண்டு நவம்பர் வரை உகானில் உள்ள தாவரவியல் பூங்காவில் உள்ள வவ்வால்களிடம் சோதனை நடத்தப்பட்டது.

சோதனை முடிவுகளின் படி 24 வகையான கொரோனா வைரசுகள் கண்டறியப்பட்டு உள்ளன. அதில் ஒன்று இப்போது உலகத்தையே அச்சுறுத்தி வரும் சார்ஸ் கோவி 2 வகை போன்று உள்ளது என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சீனாவில் இருந்து தான் கொரோனா பரப்பப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இப்போது புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, உலக நாடுகளை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Most Popular