Sunday, May 04 12:55 pm

Breaking News

Trending News :

no image

செய்திகள் வாசிப்பது அதானி…! பிரபல டிவியை வாங்கி சபாஷ்


டெல்லி: பிரபல தொழிலதிபரான அதானி குழுமம் முன்னணி தொலைக்காட்சியான NDTV பங்குகளை வாங்கி இருக்கிறது.

அரசியல்வாதிகளின் பெயர்கள் நாள்தோறும் பத்திரிகைகளில் இடம்பெறுகிறதோ இல்லையோ ஒருவரின் பெயர் ஏதேனும் ஒரு வகையில் வெளியாகி விடும். அந்த பெயர் தான் அதானி.

உலகளவில் டாப் 10 பணக்காரர்கள் வரிசையில் 3ம் இடம், இந்தியாவில் முதல் இடம் என்று இடத்தில் இருப்பவர் அதானி. ஏர்போர்ட்டுகள், துறைமுகங்கள், மின் உற்பத்தி, எரிவாயு என கிட்டத்தட்ட அனைத்துவிதமான துறைகளிலும் அதானி குழுமம் இறங்காதே துறையே இல்லை எனலாம்.

இப்போது இந்த குழுமம் தொலைக்காட்சி துறையில் இறங்கி இருக்கிறது. முன்னணி தொலைக்காட்சி ஊடகமான என்டிடிவியின் பங்குகளை வாங்கி அசத்தி இருக்கிறது. AMG MEDIA NETWORK என்ற அந்நிறுவனம் என்டிடிவியின் 26 சதவீதம் பங்குகளை வாங்கி இருக்கிறது.

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன் வைத்து, இந்த ஊடகத்தை அதானி குழுமம் வாங்கி உள்ளதாக தகவல்கள் பரவி உள்ளன.

Most Popular