திங்கட்கிழமை ‘பதவியேற்பு’ விழாவை வச்சுக்கலாம்…! அதிகாரிகளுக்கு 'சைலண்ட்' உத்தரவு…!
திருவனந்தபுரம்: திங்கட்கிழமை பதவியேற்பு விழாவை வைத்துக் கொள்ளலாம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், உத்தரவிட்டு உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நாளை முற்பகலுக்குள் 5 மாநில தேர்தல் முடிவுகளின் முன்னணி நிலவரம் தெரிந்து விடும். தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களின் ஒரு மாத காத்திருப்பு முடிவுக்கு வரும். எந்த கட்சி ஆட்சியமைக்க போகிறது என்பது தெரியாத நிலையில் கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி ஆட்சியை பிடித்தால் உடனே திங்கட்கிழமையே பதவியேற்பு விழாவை நடத்துமாறு முதலமைச்சர் பினராயி விஜயன் அதிரடி உத்தரவை அதிகாரிகளுக்கு பிறப்பித்து உள்ளார்.
திங்கட்கிழமை முதலமைச்சரும், 3 அல்லது 4 அமைச்சர்கள் மட்டும் பதவியேற்று கொள்ளலாம் என்றும், பதவியேற்பு விழாவை செய்யுங்கள் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் வாய்மொழியாக உத்தரவிட்டு உள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. எப்படியும் இடதுசாரிகள் கூட்டணி அரியணையில் அமரும் என்ற அதீத நம்பிக்கையின் உச்சம் தான் இது என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.