வன்னியர் உள்ஒதுக்கீடு..! ராமதாசுக்கு திருமா ‘சுரீர்’ கேள்வி…!
மதுரை: 9.5 சதவீதம் மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்ற முடிவுக்கு பாமக ராமதாஸ் வந்துவிட்டாரா என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.
மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் பேசியதாவது: வன்னியர் சமுதாயத்துக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு கேட்டுவிட்ட 10.5 சதவீதம் ஒப்புக் கொண்டுள்ளார் ராமதாஸ். அப்படி என்றால் 9.5 சதவீதம் மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று முடிவுக்கு வந்துவிட்டாரா?
எந்த அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு ஒப்புக் கொள்ளப்பட்டது? இது தேர்தல் நாடகமாக இருக்கிறது. அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்புகளுமே நாடகமாக தான் இருக்க வேண்டும் என்று கருத வேண்டி உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு மூலமாக ஒவ்வொரு சமூகத்திலும் எத்தனை சதவீதம் பேர் உள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்று கூறினார்.