15 நாள் தான் இருக்கு…! ஆதார், பான் கார்டால் வரப்போகும் சிக்கல்…!
டெல்லி: வரும் 30ம் தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டை இணைக்காவிட்டால் பொதுமக்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் நிலை ஏற்படும்.
நாட்டு குடிமகன்கள் அனைவரும் பான் கார்டை, ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்காக பலமுறை கால அவகாசத்தை நீட்டித்துக் கொண்டே வந்துள்ளது. வரும் 30ம் தேதிக்குள் பான் கார்டு, ஆதார் இணைப்புக்கு இறுதியாக அவகாசம் கொடுத்துள்ளது.
ஆனால் அப்படி இணைக்கவில்லை என்றால் என்ன சிக்கல்கள் நேரும் என்பதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். சரி…. வாங்க என்ன சிக்கல்கள் என்பதை பார்ப்போம்…
நீங்கள் இரு சக்கர வாகனம் அல்லது வேறு ஏதேனும் வண்டியை வாங்க வேண்டும் என்று நினைத்தால் அது முடியவே முடியாது.
வங்கியில் அது கூட்டுறவு வங்கியாக இருந்தாலும் அக்கவுண்ட் ஓபன் பண்ண முடியாது.
கிரெடிட் அல்லது டெபிட் கார்டை வாங்க முடியாது. ஓட்டல், ரெஸ்டாரெண்டில் பணம் கட்ட வேண்டும் என்றால் 50 ஆயிரம் ரூபாய் என்றால் அது முடியவே முடியாது. 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆர்பிஐயில் பத்திரங்கள் வாங்க முடியாது.