15 நாட்கள் வங்கிகளுக்கு லீவு…! வாடிக்கையாளர்களே... ரெடியா இருங்க
டெல்லி: ஆகஸ்ட் மாதத்தில் உள்ளூர் விடுமுறை, பண்டிகை நாட்கள் என மொத்தம் 15 நாட்கள் விடுமுறை என்பதால் வாடிக்கையாளர்கள் தயாராக இருக்க வேண்டும்.
இந்த முறை நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் ஆகஸ்ட் மாதத்தில் அதிக விடுமுறை நாட்களை கொண்டு இருக்கின்றன. ஆர்பிஐ பட்டியல்படி இந்த மாதம் ஒட்டு மொத்தமாக 15 நாட்கள் விடுமுறையாகும்.
15 நாட்களில் 7 நாட்கள் என்பது வழக்கமான வார இறுதி விடுமுறை நாட்கள். எஞ்சிய 8 நாட்களும் அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் பண்டிகைகளுக்கு ஏற்ப விடுமுறை அறிவிக்கப்பட்ட நாட்கள். ஆகவே கீழ்க்கண்ட விடுமுறை பட்டியலை குறித்துக் கொண்டு பரிவர்த்தனை வங்கி வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளலாம்.
15 நாட்கள் விடுமுறை பட்டியல் முழு விவரம்:
1) ஆகஸ்ட் 1, 2021 - ஞாயிறு
2) ஆகஸ்ட் 8, 2021 – ஞாயிறு
3) ஆகஸ்ட் 14, 2021 - 2வது சனி
4) ஆகஸ்ட் 13, 2021 - தேசபக்தர் தினம் (இம்பாலில் வங்கிகள் இயங்காது)
5) ஆகஸ்ட் 15, 2021 – ஞாயிறு
6) ஆகஸ்ட் 16, 2021 - பார்ஸ் புத்தாண்டு (பெலாப்பூர், மும்பை மற்றும் நாக்பூர் நகரங்களில் வங்கிகள் விடுமுறை)
7) ஆகஸ்ட் 19, 2021 – மொகரம் (அகர்தலா, அகமதாபாத், பெலாப்பூர், போபால், ஐதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லகான், மும்பை, நாக்பூர், டெல்லி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஸ்ரீநகர் நகரங்களில் வங்கிகள் விடுமுறை)
8) ஆகஸ்ட் 20, 2021 - மொகரன்/ முதல் ஓணம் விழா(பெங்களூரு, சென்னை, கொச்சி, திருவனந்தபுரம் நகரங்களில் விடுமுறை)
9) ஆகஸ்ட் 21, 2021 - திருவனந்தபுரம் வங்கிகள் (கேரளாவில் விடுமுறை)
10) ஆகஸ்ட் 22, 2021 - ஞாயிறு
11) ஆகஸ்ட் 23, 2021 - ஸ்ரீ நாராயண் குரு ஜெயந்தி (திருவனந்தபுரம், கொச்சி வங்கிகள் விடுமுறை)
12) ஆகஸ்ட் 28, 2021 - 4வது சனி
13) ஆகஸ்ட் 29, 2021 – ஞாயிறு
14) ஆகஸ்ட் 30, 2021 -ஜென்மாஷ்டமி/ கிருஷ்ண ஜெயந்தி (அகமதாபாத், சண்டிகர், சென்னை, டேராடூன், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் நகரங்களில் வங்கிகள் விடுமுறை)
15) ஆகஸ்ட் 31, 2021 - ஸ்ரீ கிருஷ்ணா அஷ்டமி. (ஐதராபாத்தில் வங்கிகள் விடுமுறை)