Sunday, May 04 12:46 pm

Breaking News

Trending News :

no image

சிவன் கோயிலில்.. காவி உடையுடன் பிரபல நடிகர்…! பதறும் ரசிகர்கள்


சென்னை; நடிகர் சிம்பு சிவன் கோயிலில் வணங்கும் போட்டோவை கண்டு ரசிகர்கள் என்ன, ஏது என்று கலங்கி தவிக்கின்றனர்.

நடிகர் எஸ்டிஆர் அல்லது சிம்பு.. இவரை தெரியாதவர்கள் தமிழ் சினிமாவில் இருக்க முடியாது. நடிப்பிலும் சரி… பேச்சிலும் சரி… அப்படியே வதந்திகளிலும் சரி… எது எப்படி இருந்தாலும் தனது மனதுக்கு தோன்றியதை அட்சரம் பிசகாமல் அப்படியே செய்பவர்.

அப்படித்தான் அவர் தமது போட்டோ ஒன்றை இணையத்தில் வெளியிட ரசிகர்கள் குழம்பி தவித்து வருகின்றனர். நண்பர்கள் தினமான இன்று அவர் ஒரு போட்டோவை டுவிட்டரில் ரிலீஸ் செய்து இருக்கார். சிவன்கோயிலில் அவர் வணங்குவது தான் அந்த போட்டோ சொல்லும் விஷயம்.

அதுவும் சரியாக நண்பகல் 12.33 மணிக்கு இந்த படத்தை பதிவேற்றி இருக்கிறார் சிம்பு. 12.33 என்பதை கூட்டினால் கூட்டு தொகை 9 வருகிறது… அவரது ராசியான எண் 9. ஆகையால் தான் ராசி பார்த்து போட்டோவை ரிலீஸ் செய்துள்ளனர் என்று கூறுகின்றனர் ரசிகர்கள்.

6 ஆண்டுகளுக்கு முன்பும், இதே போன்று தான் சிவன் கோயில் முன்பு வணங்கும் புகைப்படத்தை சிம்பு வெளியிட்டார். அப்போது அவர் அச்சம் என்பது மடமைடா படத்தில் நடித்து கொண்டிருந்தார். இப்போது அதே இடத்தில் அப்படியாக ஒரு போட்டோ வந்திருப்பதால் மாநாடு படம் எப்படி இருக்க போகுதோ என்று ரசிகர்கள் கவலைப்பட ஆரம்பித்து விட்டனர்.

Most Popular