Sunday, May 04 01:01 pm

Breaking News

Trending News :

no image

ரஜினியை பின்னாடி தள்ளிய தனுஷ்…! ஷாக்கான திரையுலகம்


சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையே நடிகர் தனுஷ் ஓரம்கட்டி விட்டார் என்பது தான் கோலிவுட்டில் பெரும் பேச்சாக உள்ளது.

தனுஷ் முன்னணி நடிகர்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். சொந்த மண்ணை தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்கி வருகிறார். ஒல்லியான தேகம், இயல்பான பேச்சு, நடனம் ஆகியவையே அவரது பிளஸ் பாய்ண்ட்.

நடிப்பில் கலக்கி வரும் நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டாரையே ஓவர்டேக் செய்துவிட்டார் என்று ஆச்சரியத்தில் உள்ளனர் கோலிவுட் வட்டாரத்தினர்.

தற்போது பிரம்மாண்டமான ஆடம்பரமான வீட்டை அவர் கட்டி வருகிறார். இந்த விவரம் அனைவருக்குமே தெரிந்த ஒன்று. போயஸ் கார்டனில் ரஜினியின் இல்லம் அருகே கட்டி வருகிறார்.

நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், ரிமோட் கன்ட்ரோல் செட்அப் என நவீன வசதிகளையும், தொழில்நுட்பத்தையும் புகுத்தி வீட்டை அமைத்து வருகிறார் தனுஷ்.

வீட்டை பற்றி புதுப்புது தகவல்களை வந்து கொண்டிருக்கும் நிலையில் லேட்டஸ்ட்டாக ஒரு தகவல் ஓடி கொண்டு இருக்கிறது. தனுஷ் வீட்டின் பட்ஜெட் ரூ. 70 கோடி, ரூ.100 என்று கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது அதன் பட்ஜெட் ரூ.150 கோடியை தாண்டிவிட்டதாம்.

அலங்கார பொருட்கள் அனைத்துமே வெளிநாட்டு இறக்குமதி தானாம். வீட்டில் இன்னும் சில வேலைகள் பாக்கி உள்ளதால் பட்ஜெட் மேலும் அதிகமாகும் என்று விஷயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

வேலைகள் இன்னமும் முடியாத நிலையில் புதுமனை புகுவிழா  தாமதமாகி கொண்டே போகிறதாம். எப்படியும் விரைவில் முடித்து கிரகப்பிரவேசம் நடத்துவதில் தனுஷ் ஸ்பீடாக உள்ளாராம். இதையெல்லாம் கேள்விப்பட்ட கோலிவுட் உலகம்.. அதுசரி ரஜினி விழாவுக்கு வருவாரா? என்று ஒரு கேள்வியை மறக்காமல் கேட்டுக் கொண்டே இருக்கிறதாம்.

Most Popular