100 நாள் நான் பேச மாட்டேன்…! என்னாச்சு…? பாஜக ஹெச். ராஜாவுக்கு…?
சிவகங்கை: 100 நாள் திமுக ஆட்சியை பற்றி விமர்சிக்க மாட்டேன் என்று பாஜகவின் ஹெச் ராஜா கூறி உள்ளார்.
தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஹெச் ராஜா. அரசியல் விவகாரங்களில் தீயாய் பேசக்கூடியவர். எந்த கருத்தை சொல்வதானாலும் துணிச்சலாக பேசும் நபர்களில் வெகுச்சிலர். ஆனால் அவரை பற்றி இணையத்தில் பறக்கும் மீம்சுகளுக்கு எல்லையே இல்லை.
இந் நிலையில் 100 நாள் திமுக ஆட்சியை பற்றி விமர்சிக்க மாட்டேன் என்று ஹெச் ராஜா கூறி உள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: ஆட்சி பொறுப்பேற்றவுடன் 100 நாட்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று ஸ்டாலின் கூறி உள்ளார். ஆகையால் 100 நாட்கள் திமுக ஆட்சியை பற்றி விமர்சிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.