Sunday, May 04 12:30 pm

Breaking News

Trending News :

no image

நான் தண்ணி அடிப்பேன்…! ஓபன் வாக்குமூலம்


நானும் மது குடிப்பேன்.. அதை ஒத்துக்கிறேன் என்று மக்கள் மத்தியில் பிரச்சார களத்தில் பேசி பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளார் கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை.

விஐபி தொகுதியாக மாறி இருக்கிறது கோவை நாடாளுமன்ற தொகுதி. எப்படியும் வெற்றி தான் என்று டெல்லி பாஜக தலைமை டிக் அடித்து வைத்துள்ள தொகுதிகளில் முதலிடத்தில் இருப்பது பாஜக. களத்தில் திமுக, அதிமுக கூட்டணிகள் வலுவாக இருந்தாலும், மக்கள், இளைஞர்கள் ஆதரவு தமக்குதான் என்று நினைத்துள்ள பாஜக வேட்பாளர் அண்ணாமலை கவுண்டம்பாளையம், ஆனைக்கட்டி, கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

பிரச்சார வாகனத்தில் நின்றபடியே வாக்காளர்களிடம் அவர் மைக்கில் பேசினார். அப்போது தமிழகத்தில் டாஸ்மாக்கால் மக்களின் வருமானம் சுரண்டப்படுகிறது என்றும், வாழ்வாதாரம் சிதைகிறது என்றும் பேசினார்.

டாஸ்மாக்குக்கு பதில் கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் என்ற அண்ணாமலை, தானும் குடிப்பேன், அதை ஒத்துக்கொள்கிறேன் என்று பேசி வாக்காளர்களை அதிர வைத்துள்ளார்.

இதை கண்ட பாஜகவினர் இப்படி ஓபனாக பேசினால் எப்படி? மக்கள் என்ன நினைப்பார்கள்? என்று பொரும ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. இது எங்கே போய் முடியுமோ? என்று மற்றொரு தரப்பு புலம்புவதாகவும் தெரிகிறது.

பிரச்சாரத்தின் போது அவர் பேசிய வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

Most Popular