கார்த்தி சிதம்பரம் முகத்தில் கரி பூசிய ராகுல்…! VIRAL VIDEO
டெல்லி: கார்த்தி சிதம்பரம் கை கொடுத்தும் அதை கண்டு கொள்ளாமல் ராகுல் காந்தி செல்லும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது தொடர்பான வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவரது எம்பி பதவியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு குரல் கொடுத்து வருகின்றன.
தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் கைதாகி விடுதலையாகினர். ஆனால் கட்சியின் முக்கியமான நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் போராட்டக்களத்துக்கு வராமல் இருந்தது பெரும் விவாத பொருளானது.
இதற்கு பதிலளித்த சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம், வீடுகளில் போராடுவதும், தெருவில் இறங்கி போராடுவது போன்று தான் என்று பதில் கூறி இருந்தார். அவரின் இந்த பேச்சு காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் போராட்டக்களத்துக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆதரவு அளிப்பதாக கருத்துகள் வெளியாகின.
இந் நிலையில் ராகுல் காந்தி இன்று நாடாளுமன்றம் சென்றார். அப்போது வெளியே நின்றிருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள், எம்பிகள் அவருக்கு வணக்கம் வைத்தனர். ராகுலும் பதிலுக்கு கை குலுக்கி மரியாதை செய்தார்.
அங்கு கருப்பு சட்டை போட்டுக் கொண்டு வந்த சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் ராகுலுக்கு கை கொடுக்க முயன்றார். அவர் கையை நீட்ட, ராகுல் முகத்தை திருப்பிக் கொண்டு, டக்கென்று உள்ளே சென்றுவிட்டார்.
இதை எதிர்பார்க்காத கார்த்தி சிதம்பரம், சில விநாடிகள் அதிர்ச்சி அடைந்தார். ராகுல் போகும் திசையையே பார்த்தபடி நின்றுவிட்டு அங்கிருந்து நடந்து சென்றார். இந்த வீடியோ இப்போது வைரலோ வைரல் ஆகி இருக்கிறது. அதை கீழே காணலாம்: