அண்ணா யூனிவர்சிட்டி மாணவரா..? உங்க ரிசல்ட் இதோ..!
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக அரியர் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
கொரோனா தொற்று ஒரு பக்கம் அனைவரையும் ஆட்டுவிக்க கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. இணையதளம் வழியாகவே இந்த தேர்வுகள் நடத்தப்பட்டன.
இந் நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அரியர் மற்றும் முதலாம் ஆண்டு தேர்வு எழுதி மாணவர்களின் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. அனைத்து தேர்வு முடிவுகளையும், இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
முன்னதாக, தேர்வுகளில் முறைகேடுகள் நடத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன. அதன் காரணமாக தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.