10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது…? தேதிகள் ரிலீஸ்
சென்னை: தமிழகத்தில் பள்ளி பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
தற்போது அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் அரையாண்டு தேர்வுக்கான பணிகளில் மும்முரமாக இருக்கின்றனர். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி வரும் அதே வேளையில் நடப்பாண்டுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியாகி உள்ளது.
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ள இந்த அட்டவணையின் படி 10ம் வகுப்புக்கு 2024ம் ஆண்டு பிப்ரவரி 23 முதுல் 29 வரை செய்முறை தேர்வு நடக்கிறது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு அதே மாதம் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை செய்முறை தேர்வும், 12ம் வகுப்புக்கு 12 முதல் 17 வரையிலும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
மொழிப்பாடம் - மார்ச் 26
ஆங்கிலம் - மார்ச் 28
கணிதம் - ஏப்ரல் 1
அறிவியல் – ஏப்ரல் 4
சமூக அறிவியல் - ஏப்ரல் 8
---------------------
11ம் வகுப்பு அட்டவணை:
மொழிப்பாடம் - மார்ச் 4
ஆங்கிலம் - மார்ச் 7
இயற்பியல், பொருளியல் – மார்ச் 23
கணினி அறிவியல், புள்ளியியல் - மார்ச் 14
உயிரியல், தாவரவியல், வரலாறு - மார்ச் 18
வேதியியல், கணக்கு பதிவியல் - மார்ச் 21
கணிதம், வணிகவியல் - மார்ச் 25
--------------------
12ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை;
மொழிப்பாடம் – மார்ச் 3
ஆங்கிலம் - மார்ச் 5
கணினி அறிவியல், உயிரி அறிவியல்,புள்ளியியல்- மார்ச் 8
வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்- மார்ச் 11
இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்- மார்ச் 15
கணிதம், விலங்கியல்,நுண் உயிரியல்- மார்ச் 19
தேர்வு முடிவுகள் 12ம் வகுப்புக்கு மே 6, 11ம் வகுப்புக்கு மே 14 மற்றும் 10ம் வகுப்புக்கு மே 10ம் தேதி வெளியாகிறது.