Sunday, May 04 01:06 pm

Breaking News

Trending News :

no image

வைரல்.. வைரல்…! 62 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி எழுதிய விஷயம்…!


சென்னை: 62 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் கருணாநிதி தம் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி, சுற்றோ சுற்று என்று சுற்றிக் கொண்டு இருக்கிறது.

தமிழக அரசியலில் மட்டுமல்ல… தேசிய அரசியல் இன்றளவும் பேசப்படும் பேசப்பட்டு வருவர் வெகு சிலரில் கலைஞர் கருணாநிதியும் ஒருவர். வார்த்தை ஜாலங்களில் அவரின் நளினமும், பக்குவமும் இன்றளவும் அனைவராலும் சிலாகிக்கப்படும்.

அதற்கு உதாரணமாக இப்போது இணையத்தில் கலைஞர் கருணாநிதி 1959ம் ஆண்டு தம் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று வைரலாகி வருகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 1057ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் குளித்தலை எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். தமக்கு எதிராக களம் இறங்கிய காங்கிரஸ் வேட்பாளர் தர்மலிங்கத்தை அவர் தோற்கடித்தார்.

அந்த தேர்தலில் வெறும் 15 எம்எல்ஏக்களுடன் திமுக தமிழக சட்டசபையில் என்ட்ரி ஆனது. தமிழகத்தில் அப்போது முதலமைச்சராக இருந்தவர் கர்மவீரர் காமராஜர். 1959ம் ஆண்டில் நடந்த கலைஞர் கருணாநிதி தொடர்பாக நடந்த ஓரு சுவாரசியமான சம்பவம் இப்போது அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

62 ஆண்டுகள் கழித்து கருணாநிதி கைப்பட எழுதிய கடிதம் ஒன்று இப்போது வைரலாகி இருக்கிறது. 1959ம் ஆண்டு குளித்தலை எம்எல்ஏவாக கருணாநிதி இருந்த போது வேங்காம்பட்டியில் அரசு பள்ளிக்கு ஆய்வுக்காக சென்றிருந்தார். ஆய்வு முடிந்து அதன் அறிக்கையை கருணாநிதி கைப்பட அரசுக்கு எழுதினார்.

அந்த ஆய்வறிக்கையை தற்போது கரூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள பிரபு சங்கர் தமது வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். வேங்காம்பட்டி பள்ளிக்கு ஆய்வு போன போது கலைஞரின் கடிதத்தை கண்டு மகிழ்ச்சியுடன் வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

கலைஞர் கருணாநிதி எழுதி இருந்த விவரம் இதுதான்:

இன்று வேங்காம்பட்டி மாவட்ட மன்ற ஆரம்ப பாட சாலையை பார்வையிட்டேன். இரண்டு ஆசிரியர்களும் இருந்தார்கள். மொத்த மாணவர்கள் 102இல் இன்று வருகை தந்திருந்தவர்கள் 71 பேர்.

இந்த பள்ளிக்கென கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் மேல் பகுதி உளுத்து போயிருக்கின்றன. அவை உடனடியாக கவனிக்கப்பட்டால் நலம். ஆசிரியர்கள் நன்கு பணியாற்றி வருவதாக பொதுமக்கள் பாராட்டினார்கள். மாணவர்களின் சுகாதாரம் இன்னும் அதிகமாக கவனிக்கப்படுதல் நன்று என்று கருணாநிதி குறிப்பிட்டு உள்ளார்.

Most Popular