கல்லூரி மாணவர்களுக்கு காத்திருக்கும் 'ஹேப்பி' நியூஸ்…? அறிவிக்கும் தமிழக அரசு
சென்னை: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.
சற்று குறைந்திருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் தமிழகத்தில் அதிகரிக்க ஆரம்பித்து இருக்கிறது. நாள்தோறும் பாதிப்பானது ஆயிரத்தை கடந்து அதிர்ச்சி அளிக்கிறது. கொரோனா பரவலை தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா வேகமாக பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஆகையால், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடிய சீக்கிரம் அது தொடர்பான விவரங்கள் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை ரத்து செய்யலாமா என்பது உயர் கல்வித் துறையிடம் சுகாதாரத்துறை அறிக்கை கேட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.