68வது முறை…! ஹேப்பியோ ஹேப்பி…! 100 அடியை தாண்டிய மேட்டூர் அணை
சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளது, விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கடந்த 8ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன் எதிரொலியாக 2 நாட்களாக மேட்டூரில் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
நேற்று 98 அடியாக அணையின் நீர்மட்டம் இருந்தது. ஆனால் தற்போது தண்ணீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் இன்று காலை 100 அடியை எட்டி இருக்கிறது. 68வது முறையாக 100 அடியை எட்டி உள்ளது, விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்டா பாசனத்துக்காக திறந்துவிடப்படும் நீரின் அளவு, 15 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.