ரூ.1000 கோடி தர்றேன்னு சொன்னாங்க…! சீமானிடம் பேரம்..?
வா,வா, கூட்டணிக்கு வா… 1000 கோடி, 500 கோடி தர்றேன்னு சொன்னாங்க என்று பாஜகவின் பேரத்தை அம்பலமாக்கி இருக்கிறார் சீமான்.
அன்றும்,இன்றும் எப்போதும் தனி தான்… யாருடனும் கூட்டணி கிடையாது, திராவிட ஆட்சி துரோக ஆட்சி என்று இன்னமும் பேசி வருபவர் நாம் தமிழர் சீமான். மத்திய பாஜக அரசையும், திமுக தமிழக அரசையும் இப்பவும் விமர்சித்து வருபவர்.
ஆனால் பாஜக ஜெயிக்க வேண்டும் என்று இஷ்டத்துக்கு வேட்பாளர்களை மாற்றி, மாற்றி அறிவித்தவர், பாஜகவின் B Team என்ற விமர்சனம் இவர் மீது உண்டு. மீட்க முடியாதது கச்சத்தீவு என்ற போதும் அதற்கு எவ்வித செயல் திட்டம் இல்லாமல் நரம்பு புடைக்க பேசி வருபவர்.
தற்போது மக்களவை தேர்தல் 2024 பிரச்சாரத்தில் படு பிசியாக உள்ள சீமான், தேனி தொகுதியில் தமது கட்சியின் வேட்பாளர் மதன் ஜெயபாலனுக்கு ஆதரவு திரட்டினார். எங்கும் பேசுபவது போல், திமுக, காங்கிரஸ், பாஜக, அதிமுக என அனைத்துக் கட்சிகளையும் திட்டிவிட்டு நரம்புகள் புடைக்க பேசினார்.
இந்த தேர்தலில் கூட்டணிக்கு வா, வா என்று தம்மை பாஜக தரப்பில் அணுகியதாகவும், 1000 கோடி, 500 கோடி ரூபாய் 15 சீட், 10 சீட் தருவதாக பேரம் பேசியதாகவும் பிரச்சாரத்தில் பொளந்துகட்டி இருக்கிறார். அவரின் பேச்சுக்கு அங்கு திரண்டிருந்த சொற்ப கூட்டமும் கைதட்டி ஆரவாரித்தது.
ஆனால், இதை கேட்ட மற்றவர்கள்… சீமான் வழக்கமாக அவிழ்த்துவிடும் கட்டுகதை தான் இது. ஏதாவது ஒன்றை வாய்க்கு வந்தது என்ற கணக்கில் புளுகுவதே அவரது ஸ்டைல். அவரிடம் பேரம் பேசியது யார்? என்று சொல்வாரா? என்று சகட்டு மேனிக்கு கழுவி ஊற்றுகின்றனர். இதற்கு எல்லாம் சீமான் தான் பதில் சொல்ல வேண்டும்.. ஆனால் அவரின் தம்பிகள் கம்பு சுற்றிக் கொண்டு இருக்கின்றனர்…!!