ரஜினி சொத்துக்கு குறி வைக்கும் ப்ளூ சட்டை மாறன்…? சர்ச்சை ட்வீட்
சென்னை: சொத்துகளை ஏழை மக்களுக்கு எழுதி வைத்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் இமயமலை செல்லலாம் என்று ப்ளூ சட்டை மாறனின் டுவிட்டர் பதிவு பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறது.
ரஜினி எது பேசினாலும் அதிலும் ஏதாவது வம்பு, தும்பு விஷயம் இருக்கிறதா என்று பார்க்கும் கூட்டம் ஒன்று எப்போதும் இருக்கும். அவரின் லேட்டஸ்ட் சினிமா தகவல்கள், சொந்த வாழ்க்கை என ஏதாவது ஒன்றை தொங்கி பிடித்து கொண்டிருப்பர்.
இப்போதும் அப்படித்தான்… சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த் பேசியதை வைத்து இஷ்டம் போல பேசியிருக்கிறார் ஒருவர். அவர் வேறு யாருமல்ல… சினிமா விமர்சனத்தை போட்டு தயாரிப்பாளர்களுக்கு கிலி ஏற்படுத்தும் ப்ளூசட்டை மாறன் தான்.
பணம், புகழ், பெயர், அரசியல்வாதிகளுடான தொடர்பு என எத்தனையோ பார்த்த சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட இல்லை என்று கூறி இருக்கிறார். அவரின் இந்த வேதனை கலந்த பேச்சு ரசிகர்களை அதிர வைத்துள்ள எதிர்மறையான விமர்சனங்கள் பஞ்சமில்லாமல் வந்து கொண்டிருக்கின்றன.
படம் வர போகிறது. அதற்கான பில்டப் என்று ஆளாளுக்கு கமெண்ட் அடிக்க… எல்லாவற்றுக்கும் மேலாக, ப்ளூ சட்டை மாறன் போட்ட டுவிட்டர் பதிவுதான் ரஜினி ரசிகர்களை உஷ்ணப்படுத்தி உள்ளது.
அவர் போட்ட டுவிட்டர் பதிவு இதுதான்:
உங்க படத்துல வர்ற மாதிரி எல்லா சொத்தையும் ஏழைகளுக்கு எழுதி வச்சிட்டு… இமயமலையில் நிம்மதியை தேடலாமே ஜி… என்று போட்டு தாக்கி இருக்கிறார்.
ப்ளூசட்டை மாறனின் இந்த பதிவு ரசிகர்களை காண்டாக்கி இருக்க, இதற்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளும் வந்து விழுவதுதான் வேடிக்கை…!