ராஜீவ்காந்தி பேரனுக்கு கட்சியில் பதவி…? விரைவில் அரசியலில் என்ட்ரி
டெல்லி: ராஜீவ் காந்தி பேரனுக்கு காங்கிரஸ் கட்சியில் பதவி வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மற்ற கட்சிகளை போன்று காங்கிரஸ் கட்சியில் வாரிசுகளுக்கு எப்போதுமே முன்னுரிமை உண்டு. அவர்களுக்கு கட்சியில் பதவி அளித்து, முக்கியத்துவம் அளிக்கப்படுவது வழக்கம்.
கடந்த காலங்களை போன்றே இப்போது மேலும் ஒரு வாரிசு காங்கிரசில் அடியெடுத்து வைக்க உள்ளது. அவர்தான் பிரியங்கா காந்தியின் மகன் ரெய்ஹான் வத்ரா. இவருக்கு இப்போது வயது 19.
இளைஞரான இவருக்கு அரசியலில் அதிக ஈடுபாடு இருக்கிறதாம். டுவிட்டரில் அக்கவுண்ட் வைத்துள்ள இவரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 12000.
விரைவில் இவருக்கு கட்சியில் மாணவர் அணியின் தலைவர் பதவியை அளிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.