கோலிவுட்டை அசைத்த கொரோனா…! முக்கிய பிரமுகர் திடீர் மரணம்…!
சேலம்: நடிகர் சூர்யா நடித்த கஜினி திரைப்படத்தின தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் கொரோனாவுக்கு பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அழகாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் சினிமா தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன். 59 வயதான அவருக்கு அண்மையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து சேலத்தில் தனியார் மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்டார்.
ஆனால் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்துவிட்டார். மறைந்த சேலம் சந்திரசேகரன் உடலானது சீலநாயக்கன்பட்டியில் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சேலம் சந்திரசேகரன் நடிகர் சூர்யாவை வைத்து கஜினி, நடிகர் தனுஷை வைத்து சுள்ளான் ஆகிய படங்களை தயாரித்தவர். இதுதவிர பிப்ரவரி 14, கில்லாடிட, சபரி உள்ளிட்ட படஙகளை தயாரித்தவர். 10 ஆண்டுகளாக எந்தவித தயாரிப்பிலும் அவர் ஈடுபடவில்லை. சேலம் சந்திரசேகரன் மறைவை கண்டு கோலிவுட் உலகம் அதிர்ந்து போயிருக்கிறது.