Sunday, May 04 12:21 pm

Breaking News

Trending News :

no image

சசிகலாவை பற்றி..! பேட்டியில் எடப்பாடி சொன்ன ‘அந்த’ வார்த்தை…!


டெல்லி: சசிகலாவை பற்றி என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி சாமர்த்தியமாக ஒரு பதில் சொல்லி அசத்தி இருக்கிறார்.

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் டெல்லியில் பிரதம்ர் மோடியை சந்தித்து பேசி உள்ளனர். அவர்களின் இந்த சந்திப்பு நாடாளுமன்ற அலுவலகத்தில் பிரதமர் அறையில் நடந்தது. அவர்களின் இந்த சந்திப்பு முக்கியவத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை… சசிகலாவின் ஆடியோ அரசியல், உள்ளாட்சித் தேர்தல், முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் என விவகாரங்கள் பற்றியதாக இருக்கும் என்று கூறப்பட்டது.

இந் நிலையில் பிரதமர் மோடியை சந்தித்த பின்னர், எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி சார்பாக பிரச்சாரம் செய்த பிரதமருக்கு நன்றி சொன்னோம்.

தமிழகத்துக்கு அதிக கொரோனா தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும், மேகதாது திட்டம், காவிரி கோதாவரி இணைப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசினோம் என்றார்.

அப்போது அதிமுக கட்சி பிரச்னை பற்றி பேசினீர்களா..? சசிகலா ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறி உள்ளாரே என்று கேள்வி கேட்டனர். இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர் உடனடியாக நன்றி வணக்கம் என்று கூறி பேட்டியை முடித்துக் கொண்டு விட்டார்.

சசிகலா பற்றி எடப்பாடி பழனிசாமி ஒன்றும் கூறவில்லை. பிரதமருடன் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது எஸ்பி வேலுமணி, ரவீந்திரநாத், தம்பிதுரை உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Most Popular