சிவகார்த்திகேயனின் Chellamma பாடல்..! சாதனை மேல் சாதனை
சென்னை: சிவகார்த்திகேயனின் Chellamma பாடல் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் திரைப்படத்தில் ஒன்று 'டாக்டர். இந்த படத்தினை கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார் இந்த படத்தில் மலையாள நடிகையான பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
கே. ஜே.ஆர்.ஸ்டுடியோஸூடன் சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, வினய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் இந்த படத்திலுள்ள #Chellamma என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் யூடியூபில் டிரெண்டிங்கிலும் இடம்பெற்றது.சிவகாரத்திகேயன் எழுதியுள்ள இந்த பாடல் தற்போது 10மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.