தமிழகத்தில் இன்றைக்கும் உச்சம் பெற்ற கொரோனா..! எத்தனை பேர் தெரியுமா..?
சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றானது, 28,978 பேருக்கு உறுதியாகி இருக்கிறது.
இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் மேலும் 29,978 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் சேர்த்து ஒட்டு மொத்த எண்ணிக்கையானது 14,09,237 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் தமிழகத்தில் 20, 904 பேர் குணமாக ஒட்டுமொத்தமாக குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12,40,968 பேராக இருக்கிறது. 232 பேர் இன்று மட்டும் பலியாகி உள்ளனர்.
சென்னையில் மட்டும் 7149 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட எண்ணிக்கை 2,41,54, 820 ஆகும். இன்னமும் 1,52,389 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.